மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி:  சிறப்பாக நடைபெற்ற புதியதோர் உலகம் செய்வோம் நிகழ்ச்சி..!

மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பருத்திப்பட்டு, ஆவடி, சென்னையில் சர்வதேச இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு புதியதோர் உலகம் செய்வோம் என்னும் தலைப்பில் இலவசமாக பொதுமக்களுக்கு 1000 மரக்கன்றுகள் வழங்கும் விழா, ஆகஸ்ட் 13ம் தேதி சனிக்கிழமை இன்று அண்ணா நகர் வி.ஆர். மாலில் மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியானது மகாலட்சுமி கல்விக் குழுமத்தின் கல்லூரி நிர்வாக இயக்குநர் திரு.சு.கு.திருக்குமரன் அவர்கள் தலைமையில், கல்லூரி முதல்வர் முனைவர் இரா. குமுதினி அவர்கள் மாணவிகளுக்கு மரங்களின் மகத்துவத்தை திறம்பட விளக்கினார்கள்.

மேலும் கல்லூரி துணை முதல்வர்கள் முனைவர் சி. ராமசாமி அவர்களும் மற்றும் முனைவர் உ.இந்துமதி அவர்களும் ,மரங்களால் மக்களுக்கு விளையும் நன்மைகளை பதிவு செய்தார்கள். 

இந்த நிகழ்ச்சியில் நமது கல்லூரிக் கலைக்குழுவின்  ஒருங்கிணைப்பாளர் பேரா.திருமதி. பவ்யா  அவர்கள்  மற்றும் பேரா.சிவசங்கரி, பேரா.உமா மகேஸ்வரி,பேரா.அக்ஷயா போன்றோர்களின் ஒத்துழைப்பால் மாணவிகள் துணிந்து செயல்படுத்தப்பட்டு, 1000 மரக்கன்றுகளையும் அங்கே வந்தவர்களுக்கு வழங்கியது, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *