2 மாவட்டங்களுக்கு கனமழை – வானிலை மையம் அப்டேட்!!

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, வட தமிழக மாவட்டங்கள்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என வானிலை மையம் கூறியுள்ளது.

அதே போல் நீலகிரி மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஒரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌ என கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *