அமெரிக்கக் கடற்படைக் கப்பல் திடீர் சென்னை வருகை: பின்னணி என்ன?

அமெரிக்கை கடற்படையை சேர்ந்த சார்லஸ் ட்ரூ என்ற ராணுவ கப்பல் பழுது நீக்கும் பணிக்காக சென்னை வந்துள்ளது. இந்த கப்பலானது இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் செயல்படும் அமெரிக்க கடற்படையினருக்கு தேவையான முக்கிய உதவிகளை செய்து வருவது இதன் வேலையாக அமைந்துள்ளது.

அதோடு அமெரிக்கா கடற்படை கப்பல்களுக்கு தேவையான எரிபொருள், உணவு, கடற்படை தளவாடங்கள், உதிரிபாகங்கள், அஞ்சல் போன்ற அனைத்துப் பொருட்களையும் கொண்டு செல்வதற்கு இந்த கப்பல் பெரிதும் பயன்படுகிறது.

அமெரிக்க அரசின் சிவில் சர்வீஸ் இயனரால் இயக்கப்படும் இந்த சார்லஸ் ட்ரூ கப்பலானது 41ஆயிரம் டன் எடை வரையிலான பொருட்களை எடுத்துச்செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த கப்பலை தபால் அலுவலகம் போன்ற துணை பெயர்களினால் அழைக்கப்படுகிறது.

இந்நிலையில் 689 அடி நீளம் கொண்ட சார்லஸ் ட்ரூ கப்பல் 63% சரக்குகளை மட்டுமே கொண்டுசெல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு இரண்டு ஹெலிகாப்டர்களை எடுத்துச் சொல்லும் திறன் கொண்டதாக இந்த கப்பல் அமைந்துள்ளது.

இத்தகைய சிறப்பம்சம் கொண்ட கப்பல் பழுது ஏற்பட்டதால் சென்னை அருகே இருக்கும் தனியார் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு தற்போது கப்பலின் பழுது நீக்கும் பணிகள் தொடங்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *