இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதன் படி, கனமழை காரணமாக வால்பாறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். குறிப்பாக விடிய விடிய கனமழை பெய்து வந்ததால் இத்தகைய அறிவிப்பானது விடப்பட்டுள்ளது.

அதே போல் கொடைக்கானல் மற்றும் சிறுமலை பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் கூறியுள்ளார். இதனிடையே இன்றைய தினத்தில் வால்பாறை மாவட்டத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும், 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியிருப்பதால் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கனமழை பெய்யும் மாவட்டங்களுக்கு அனுப்பட்டு உள்ளனர். மேலும், நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்றைய தினத்தில் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

75 வது சுதந்திர தினம்: இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் – திரௌபதி முர்மு

இந்திய நாட்டின் பாதுகாப்பு, பராமரிப்பு, முன்னேற்றம், நல்வளம் காக்க அனைவரும் முன்வர வேண்டும்…

தமிழ் சினிமா வரலாறு பாகம் இரண்டு – 40 திருடர்களுடன் தமிழ் சினிமாவை மிரட்டிய அலிபாபா

மலைக்கள்ளன் கொடுத்த மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு வெளியான கூண்டுக்கிளி, குலேபகாவலி இரண்டும் அதை…