மக்களே உஷார்..!! அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில்..!!

கடந்த சில நாட்களாவே நம் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் 4 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சூழலில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.

அதே போல் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளார். மேலும், மழையின் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.