துப்பாக்கியால் சுட்டு ஆயுதப்படை காவலர் தற்கொலை!! சென்னையில் பரபரப்பு!!

நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருப்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் காவலர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே துப்பாக்கி சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்க்கும்போது காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இருந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியுடன் அவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அதே போல் துப்பாக்கி சூட்டில் அவரது முகம் முழுவதும் காயமடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து பெரிய மேடு போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…