மாணவி ஸ்ரீமதியின் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மேல்நிலைப்பள்ளி படித்து வந்த மாணவி ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதனால் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டகாரர்கள் வன்முறையில் ஈடுப்பட்டனர். இதனால் பள்ளியில் இருக்கும் பொருட்கள் சூறையாடப்பட்டது. அதோடு போராட்டத்தில் ஈடுபட்ட 180-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
அதோடு சிபி சிஐடி போலீசார் பள்ளியில் பதிவாகி இருந்த அனைத்து சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி தொடர்ந்து பல கோணங்களில் ஆய்வு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் ஸ்ரீமதி மரணம் தொடர்பாக புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
அதில் மாணவி சுயநினைவின்றி கிடந்த மாணவியை பள்ளி காவலர் உள்ளிட்ட 3 ஆசிரியைகள் சேர்ந்து தூக்கி வரும் சிசிடிவி வீடியோ பதிவு தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.