கருக்கலைப்பு விவகாரம்!! தனியார் மருத்துவமனைக்கு சீல்!!

கள்ளகுறிச்சி தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியை சேர்ந்த பெரியநாயகி என்பவர் கருக்கலைப்பு செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கருக்கலைப்பு செய்ததில் பெரியநாயகி அன்றிரவு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சம்பவம் அறிந்த போலீசார் உயிரிழந்த பெரிய நாயகியின் மரணம் குறித்து உரிய விசாரணை எடுக்கப்படுமென கூறியுள்ளனர். இதனால் சாலை மறியல் போராட்டத்தை உறவினர்கள் கைவிட்டனர். இந்த சூழலில் பெரிய நாயகியின் உடல் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மூன்று குழுக்களை அமைத்து மருத்துவமனையில் விசாரணை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ததாகவும் கருக்கலைப்பு செய்வதற்கு முறையான சான்றிதல்கள் வழங்கப்படாமல் இருந்ததாக தெரிந்தது.

இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் அந்த மருத்துவமனைக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். அதன்படி கள்ளக்குறிச்சி சுகாதாரத்துறை இணை இயக்குனர் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சீல் வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.