சென்னையில் 9 பழமையான சிலைகள் பறிமுதல்!!!

Statue

தமிழகத்தில் சிலை தடுப்பு அதிகாரிகள் கடந்த சில நாட்களாகவே வெளிநாடுகளுக்கு கடத்தப்படும் சிலைகளை தொடர்ந்து மீட்டுக்கொண்டு வருகின்றனர். அந்த அடிப்படையில் வெளிநாடுகளில் வைக்கப்பட்டிருக்கும் பாரம்பரிய ஓவியங்கள் தொன்மையான சிலைகளை கண்டுப்பிடித்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக சென்னை பிராட்வேயில் மானுவேல் ஆர்.பினேரியோவுக்கு சொந்தமான கட்டிடத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு சிலை கடத்த திட்டமிட்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது முருகன்,தட்சிணாமூர்த்தி, சனீஸ்வரர், அம்மன், வீரபாகு, வள்ளி, தெய்வானை உள்ளிட்ட 9 சிலைகளை அதிகாரிகள் மீட்டனர். இந்த சிலைகள் 300 ஆண்டுகளுக்கு பழமையானது என கூறப்பட்டுள்ளது.

சிலைகள் குறித்து அதிகாரிகள் ஆவணங்களை கேட்டபோது எந்தவித தகவல்களையும் தெரிவிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…