ஐஐடி வளாகத்தில் பாலியல் அத்துமீறல்: சிக்கிய மர்ம நபர் கைது!!

சென்னை ஐஐடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் உணவக ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை ஐஐடி வளாகத்தில் ஜூலை 24-ம் தேதி இரவு மாணவி சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபரால் பாலியல் தொல்லை முயற்சி நடந்ததாக கூறப்பட்டது. குறிப்பாக சுமார் 20 வயது மிக்க நபர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக ஐஐடி நிர்வாகம் விசாரணை நடத்தியது. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க உத்தரவு பிறப்பித்தார். மயிலாப்பூர் அனைத்து மகளிர் மற்றும் கோட்டூர்புரம் போலீசார் பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் ஐஐடி வளாகத்தில் ஜூஸ் கடை நடத்தி வரும் பீஹாரை சேர்ந்த சந்தன்குமார்(24) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சந்தன்குமார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
மேலும், 354 மற்றும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலிசார் அவரை செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்