கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்: வெளியான புதிய தகவல்!!

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் இரண்டு உடற்கூறு ஆய்வு முடிவுகள் புதுச்சேரி ஜிம்மர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரது உடல் 2 முறை உடற்கூராய்வு செய்யப்பட்டது. அதனை ஆய்வு செய்ய புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தடயவியல் துறை பேராசிரியர் டாக்டர் குஷகுமார் சாஹா, தடயவியல் துறைத்தலைவர் டாக்டர் சித்தார்த் தாஸ், தடயவியல் துறை கூடுதல் பேராசிரியர் டாக்டர் அம்பிகா பிரசாத் பத்ரா ஆகிய 3 பேரை கொண்ட ஒரு குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், உடற்கூராய்வு முடிவுகளை ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் தங்கள் ஆய்வறிக்கையை, மூடி முத்திரையிட்ட உறையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கைகள், சிபிசிஐடி போலீஸார் மூலம், புதுச்சேரி ஜிப்மர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இக்குழுவினர், உடற்கூராய்வு முடிவுகளை முழுமையாக ஆய்வு செய்து தங்கள் ஆய்வறிக்கையை ஒரு மாதத்திற்குள் விழுப்புரம் நீதிமன்றத்தில் சமர்பிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தகவல்களால் பல்வேறு முடிவுகள் வெளியாகலாம் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…