SRM பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி!!! – பாரிவேந்தர் அறிவிப்பு!!!

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 300 மாணவர்களுக்கு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நடப்பாண்டிலும் இலவச உயர்கல்வி வழங்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் உயர்கல்வி பெறும் மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கும் திட்டத்தின் கீழ் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் மிகப்பெரிய கல்வி குழுமமாக இருக்கும் எஸ் ஆர் எம் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் 2019 முதல் 3 ஆண்டுகளில் 900 மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி வழங்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். இதன் தொடர்ச்சியாக நடப்பாண்டிலும் 300 மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

இந்த திட்டத்தில் பயன் அடைய விரும்பும் மாணவர்கள் 12 முதல் 3-ம் தேதி வரையில் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ww.srmist.edu.in இந்த அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் ஆகஸ்ட் 8 முதல் 12-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.