என்னது!! ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1200-க்கு விற்பனையா?

ஆடி மாதம் திருவிழாவின் காரணமாக மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் மல்லிகை பூவின் விலையானது ரூ.1200- ஆக உயர்ந்துள்ளது.

தென்மாவட்டங்களில் மிகப்பிரபலமான சந்தையாக காணப்படுவது மதுரை மாட்டுத்தாவணி சந்தை ஆகும். குறிப்பாக மற்ற மாவட்டங்கள், மாநிலங்களுக்கு இங்கிருந்துதான் மல்லிகைப்பூக்கள் எடுத்துசெல்லப்படுகிறது. கடந்த சில தினங்களாக மல்லி பூவின் விலையானது 600 முதல் 700 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு இருந்தது.

இந்த சூழலில் ஆடித்திருவிழா, வரலட்சுமி நோன்பு வர இருப்பதால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அந்த வகையில் மல்லிகைப்பூவின் விலையானது ரூ.1200- ஆக விற்பனையாகிறது.

அதே போல் சம்மங்கி ரூ.120, பிச்சிப்பூ ரூ.600, முல்லை ரூ.500, பட்டன் ரோஸ் ரூ.100, அரளி ரூ. 120-ஆக விற்பனையாகிறது. சராசாரியாக பூக்களின் விலையானது 20 முதல் 40 வரையில் அதிகரித்து காணப்படுகிறது.

தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்டதால் மதுரை மார்க்கெட்டிற்கு வரும் பூக்களின் அளவானது குறைந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பூக்களின் விலை அதிகரித்து இருப்பதாகவும் வருங்காலங்களில் மேலும் அதிகரிக்க கூடும் என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.