கள்ளக்குறிச்சி: நடுரோட்டில் திடீரென பற்றி எறிந்த கார்!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தீ விபத்துகள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் எதிர்பாராதவிதமாக தீ பிடித்து எரியும் சம்பவம் வாடிக்கையாகி வருகிறது.

அந்த வகையில் திருக்கோவிலூர் சங்கராபுரம் சாலையில் சிவராஜ், பிரபு ஆகிய இருவரும் காரில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது கரடி அய்யனார் கோயிலை கடந்தபோது காரின் முன்பகுதியில் திடீரென புகை வெளியேறியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் சாலையோரமாக காரை நிறுத்திவிட்டு உடனே தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வந்து பார்த்த பொழுது கார் முழுவதும் தீக்கிரையாது.

இதனிடையே சம்பவம் குறித்து அப்பகுதியில் இருக்கும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…