சென்னையில் பயங்கரம்: ஏ.சி வெடித்து இளைஞர் பலி!!

கடந்த சில நாட்களாக நம் தமிழகத்தில் ஏ.சி வெடித்து ஏற்படும் தீ விபத்துகள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் ஏ.சி வெடித்து இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொளத்தூர் அடுத்த வெற்றி நகர் மண வாளன் தெருவில் வசித்து வருபவர் 28 வயதான ஷியாம். இவர் ஆவின் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் தனலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைப்பெற்றதாக கூறப்படுகிறது.

தற்போது ஆடி மாதம் தொடங்கியுள்ளதால் அவர் தாய் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஷ்யாம் தனது வீட்டின் அறையில் இருக்கும் ஏ.சி-யை ஆன் செய்துவிட்டு டிவி பார்த்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராதவிதமாக ஷியாம் தங்கியிருந்த அறையில் ஏசி பயங்கரமாக வெடித்ததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அங்கு சென்று பார்த்த போது தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்ததாக தெரிகிறது.

உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர் சூழலில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஷியாமை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அவர் உடல் கருகிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் சம்பவம் குறித்து திரு.வி.க நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.