கனமழை எதிரொலி: குற்றால அருவிகளில் குளிக்க தடை!!

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் குற்றால அருவியில் நீர்வரத்து கிடுகிடுவென அதிகரித்துள்ளது. குறிப்பாக ஐந்தருவி மெயின் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அங்கு குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்றைய தினத்தில் பெய்த கனமழையின் காரணமாக கும்பாவதி என்ற அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மதுரையை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதனால் நேற்று மாலை முதல் குற்றால அருவியில் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்தது. இன்று காலை நீர்வரத்து குறைந்ததால் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த சூழலில் பிற்பகலில் கேரளாவில் ரெட் அலர்ட் விடப்பட்ட நிலையிலே குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டத் தொடங்கியது.

இதனால் மாவட்ட நிர்வாகம் அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு தடை விதித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். அதோடு கூடுதலாக பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.