வணிக சிலிண்டர் விலை அதிரடி குறைவு: எவ்வளவு தெரியுமா?

கடந்த சில நாட்களாகவே உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக சிலிண்டர் விலையானது தாறுமாறாக உயர்த்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை மாற்றி அமைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அதன் படி, இன்றைய தினத்தில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.36.50 காசுகள் குறைந்து ரூ.2,141-க்கு விற்பனையாகிறது. அதே போல் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை வீட்டு சிலிண்டர் விலை ரூ.1,068.50-க்கு விற்பனையாகிறது.

மேலும், வணிக உபயோக சிலிண்டர் விலையானது குறைக்கப்பட்டு இருப்பதால் ஹோட்டல் உரிமையாளர்கள் பார்சல் சேவையை குறைப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *