கனமழை எதிரொலி: பொதுமக்கள் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு செல்ல தடை!!!

மேட்டூர் அணையில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறக்கப்படுவதால் காவிரி கரையோர மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காவிரி பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கர்நாடக தமிழக எல்லைப்பகுதியான பிலிகுண்டு பகுதிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 24 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டு இருக்கிறது.

இதனால் ஒகேனக்கல் ஆற்றின் அருகே உள்ள ஐந்து அருவி, சினி பால்ஸ், மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் இயக்கவும் அருவியில் குளிக்கவும் தொடர்ந்து 21 நாட்களாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன் மேட்டூர் அணை நீர்வரத்து குறைந்த நிலையில் தற்போது அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அணைக்கு வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

இதனால் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவுப்படி காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகரித்து வருவதால் கரையோரங்களில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக தண்டோரா மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.