ஆடி அசைந்து வீதியில் உலா வந்த யானையால் பரபரப்பு!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே காட்டு யானைகளின் தொந்தரவு என்பதை பொதுமக்களுக்கு அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் குறைந்தபாடில்லை.

அந்த வகையில் கோவை சமயபுரம் பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த அலங்கார மின் விளக்குகளை உரசாமல் லாபகரமாக வனப் பகுதிக்கு சென்றது மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையம் அருகே வன காளியம்மன் கோவில் திருவிழாவை கொண்டாடும் விதமாக சமயபுரம் சாலையில் இரண்டு புறங்களிலும் ஒளிரும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இன்று காலை கல்லாறு வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை ஆடி அசைந்து கம்பீரமாக சமயபுரம் சாலையை கடந்து காட்டுக்குள் புறப்பட்டது. ஆனால் சாலையோரம் போடப்பட்ட தோரணம் மற்றும் மின் விளக்குகளை கண்டு சற்று யானை தயங்கியது.

பின்பு லாவகமாக உடலை உருக்கி வனப்பகுதிக்கு சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

Leave a Reply

Your email address will not be published.