அடடே..!! அரசமரத்தடியில் இப்படி ஒரு நிகழ்வா?

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே பொம்மிடி சாலையில் புளியம்பட்டி உள்ளது இந்த பகுதியில் நெடுஞ்சாலை ஓரம் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பசுவேஸ்வரர் ஆலயம் உள்ளது இந்த ஆலயத்திற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து செல்வர் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தின் முன் பகுதியில் நூறாண்டு கால அரச மரம் ஒன்று உள்ளது.

இந்த அரச மரம் இப்பகுதி மக்களின் நிம்மதியை கொடுப்பதோடு மரத்தடியில் அமர்ந்து ஓய்வெடுத்தால் நல்ல சுகத்தையும் அருமையான தூக்கத்தையும் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக கொடுத்து வருகிறது இதனால் இந்த அரச மரத்தடி எப்பொழுதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பியே இருக்கும் அப்பகுதியில் வந்து செல்லும் பொதுமக்களும் பக்தர்களும் வாகன ஓட்டிகளும் முண்டியடித்துக் கொண்டு வந்து வாகனத்தை நிறுத்திவிட்டு குட்டி தூக்கம் ஒன்று போட்டு ஓய்வெடுத்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

நேற்றும் இதே போல இந்த அரச மரத்தடியில் 20க்கும் மேற்பட்டோர் முண்டியடித்து இடம் பிடித்து தூங்குவது பார்ப்பதற்கு மகிழ்ச்சியையும் ஒரு மரத்தின் நிழல் எவ்வளவு பேருக்கு சுகத்தை கொடுக்கிறது என்பதையும் எடுத்துக்காட்டுவதாகவே இருந்து வருகிறது.

விஞ்ஞான யுகத்தில் கலைப்பாற்றுவதற்கும் ஓய்வெடுக்குவதற்கும் மின்விசிறிகள் ஏசி பல வசதிகள் வந்தாலும் இயற்கை காற்றும் அரசடி மரத்து நிழலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சிறிது நிமிடங்களிலேயே களைப்பை மறந்து சில வினாடிகளில் தூக்கத்தை வரவழைத்து விடும் என்பதற்கு உதாரணமாக இந்த அரச மரம் திகழ்ந்து வருகிறது

Leave a Reply

Your email address will not be published.