ஓங்கூர் ஆற்றின் குறுக்கே பாலம் பழுது: வாகனம் சென்றாலே அதிரும் பாலம்!!!

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அருகே இருக்கும் பாலத்தில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்ய பொதுப்பணி துறையினருக்கு விழுப்புரம் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தின் எல்லையில் உள்ள ஓங்கூர் ஆற்றின் மேல் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் 500 மீட்டர் நீளத்திற்கு பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் ஒரு பகுதியில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் கடந்து செல்லும்போது பாலமானது அதிர்வு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
பாலத்தின் மையப்பகுதியில் மேலும் கீழுமாக அசைந்ததால் அங்குள்ள வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் பாலத்தின் ஒரு பகுதி மூடப்பட்டு ஒரு வழி மூலம் வாகனங்கள் சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் பாதிக்கப்பட்ட பாலத்தை ஆய்வு செய்தார். பாலத்தில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்ய பொதுப்பணி துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார்.