இறுதி கட்டத்தை எட்டிய கோடநாடு வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கொடநாடு கொலை கொள்ளை வழக்கை ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோத்தகிரி அருகே கடந்த கடந்த 2017ஆம் ஆண்டு கொடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றது. அதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜ் உள்ளிட்ட 11 பேர் ஈடுப்பட்டதாக வழக்குபதிவு செய்யப்பட்டது.

இதில் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து சயான் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு விசாரணை நடைப்பெற்று வந்தது. வழக்கில் புதிய திருப்பமாக தனிப்படை போலீசார் கூடுதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் கனகராஜ் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் மனோஜ் ஆகிய இருவரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். உதகை மாவட்டம் மகிளா நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

கனகராஜ் மரணம் தொடர்பான புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தனர். இதையடுத்து விசாரணையை அடுத்த மாதம் 26-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதேபோல் விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.