சென்னையில் பரபரப்பு!!! – விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு..

சென்னை பெருங்குடியில் கழிவுநீர் கிணற்றை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உறை கிணற்றில் சுத்தம் செய்து கொண்டிருந்த சரவணன் மற்றும் அவரை காப்பாற்ற முயன்ற காளிதாஸ் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை பெருங்குடி அடுத்த கல்லுகுட்டை பகுதியில் வசித்து வருபவர் சரவணம். இவர் திருவான்மையூரில் அச்சகம் வைத்து நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுமார் 7 அடி உயரம் கொண்ட உறை கிணற்றில் கழிவுகளை அப்புறப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அந்த வகையில் இன்று மதியம் நீலாங்கரை சேர்ந்த காளிதாஸ் என்பவரை அழைத்து வந்து கழிவுநீரை மோட்டார் வழியாக அகற்றி அதனை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில் விஷவாயு தாக்கி காளிதாஸ் உறை கிணற்றில் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவரை காப்பாற்ற நினைத்த சரவணன் என்பவர் கீழே விழும்போது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அங்கேயே மயங்கி தாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்த துரைப்பாக்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடல்களையும் மீட்டனர்.

தற்போது பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.