ஆடி அமாவாசை: சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!!

ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி உப்புதுறை மலைப்பாதை வழியாக செல்வதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சித்தர்கள் வாழ்ந்ததாக கூறும் சதுரகிரி மலைப்பகுதியில் இருக்கும் மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும்.

கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு ஆண்டுகளாக திருவிழா நடைபெறாத நிலையில் இன்று நடைபெறும் ஆடி அம்மாவாசை திருவிழாவையொட்டி கோயிலுக்கு நேற்றுமுன்தினம் முதல் நாளை வரையில் பக்தர்கள் சென்றுவர அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் தாணிப்பாறை. சாத்தூர் மலை பாதைகளில் வழியாக நேற்று முந்தினம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது உப்புதுறை பாதை வழியாக செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

மேலும், சதுரகிரி மலைப் பகுதிகளுக்குச் செல்லும் பக்தர்களுக்கு இன்று முதல் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…