கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் வழக்கில் திருப்பம்!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாம் ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மரணமடைந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கைதான தாளாளர் ரவிகுமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கர், வேதியல் ஆசிரியர் ஹரிப்ரியா மற்றும் கணித ஆசிரியர் கிருத்திகா ஆகியோர் சேலம் மத்திய சிறைச்சாலையில் உள்ள நிலையில் மூன்று நாள் காவலில் விசாரிக்க சிபிஐ போலீசார் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான அமர்வு நேற்று நீதிபதி புஷ்பராணி முன் விசாரணைக்கு வந்தபோது கைதான 5 பேரையும் ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி வழங்கியது. அதன்படி அவர்களிடம் சுமார் 12 மணிநேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் இன்று பிற்பகல் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்ட நிலையில் ஐந்து பேரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.