கள்ளக்குறிச்சி பள்ளியில் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்!

கடந்த ஜூன் 13ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது பள்ளிக்கு தீ வைப்பது மற்றும் பள்ளியில் இருக்கும் பொருட்களை சூறையாடினர்.

இதனால் மீண்டும் பள்ளிகள் தொடங்குமா? என்ற சந்தேகம் பெற்றோர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த சூழலில் புதன்கிழமையில் இருந்து மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கள்ளக்குறிச்சியில் சூறையாடப்பட்ட பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு புதன்கிழமையில் இருந்து ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என கூறப்பட்டு இருந்தது. இந்த சூழலில் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியின் பயின்ற மாணவர்களுக்கு இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்குகிறது.

மேலும், 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அடுத்த வாரம் முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…