கள்ளக்குறிச்சி விவகாரம்: நீதிமன்றம் புதிய உத்தரவு!!

கடந்த 13-ஆம் தேதி கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் படிக்கும் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக போராட்டமானது வன்முறையாக மாறி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய 5 பேரை கைது செய்த காவல்துறையினர் சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்த விவகாரத்தில் சிபிசிஐடி அடுத்த கட்ட முயற்சி எடுப்பதற்காக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் 5 பேரையும் தனிப்பட்ட முறையில் 3 நாட்கள் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் 3 நாட்கள் கொடுக்க முடியாது என்றும் 1 மட்டும் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இதில் செயலாளர் சாந்தி தங்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் நீதிபதி கோரிக்கையை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.

மேலும், சிபிசிஐடி நடத்தும் விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.

75 வது சுதந்திர தினம்: இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் – திரௌபதி முர்மு

இந்திய நாட்டின் பாதுகாப்பு, பராமரிப்பு, முன்னேற்றம், நல்வளம் காக்க அனைவரும் முன்வர வேண்டும்…

தமிழ் சினிமா வரலாறு பாகம் இரண்டு – 40 திருடர்களுடன் தமிழ் சினிமாவை மிரட்டிய அலிபாபா

மலைக்கள்ளன் கொடுத்த மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு வெளியான கூண்டுக்கிளி, குலேபகாவலி இரண்டும் அதை…