ஆகஸ்ட் 1ஆம் தேதி எந்த மாவட்டத்திற்கு விடுமுறை!!!- ஆட்சியர் உத்தரவு..

தமிழகத்தில் ஆடி மாதம் தொடங்கினாலே அனைத்து மாவட்டங்களிலும் திருவிழாக்கள் தொடங்கியது என்று கூறலாம். குறிப்பாக கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவிழாக்கள் நடத்த அரசு தடை விதித்து இருந்தது.
தற்போது தொற்று பரவல் குறைந்துள்லதால் அனைத்து திருவிழாக்களும் நடத்த அரசு அனுமதி கொடுத்துள்ளது. அந்தவகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூர் பகுதியில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூரம் திருவிழா நடைப்பெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினத்தில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வருகின்ற ஆகஸ்ட் 13-ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இத்தகைய அறிவிப்பினால் மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.