16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: காவலர் போக்சோ சட்டத்தில் கைது!

கைது

திருச்சி அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து சட்டவிரோதமாக கருவை கலைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகில் இருக்கும் கிராமத்தில் இருக்கும் 16-வயது சிறுமி தனது உறவினர் பராமரிப்பில் இருந்து வருகிறார். இதனிடையே சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்து திருச்சி மருத்துவமனையில் போலி ஆவணங்களை வைத்து சட்டவிரோதமாக கருவை கலைத்தாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் கல்லக்குடி காவல் நிலைய பிரகாஷ் என்பவர் சிறுமியிடம் அத்துமீறியது உறுதியான நிலையில் அவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இது சம்பவத்தில் பலருக்கும் தொடர்பு இருப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், உறவினர் பராமரிப்பில் வளர்ந்து வந்த சிறுமி காவல்துறையினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.