ஷாக் நியூஸ்!! கடலூரில் கபடி வீரர் மயங்கி விழுந்து பலி..

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த புறங்கணி கிராமத்தில் வசித்து வருபவர் 21 வயதான விமல்ராஜ். சேலம் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2ஆம் ஆண்டு படித்து வருவதாக கூறப்படுகிறது. அதோடு கபடி வீரர் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பண்ருட்டி அருகேயுள்ள மாண்டிகுப்பத்தில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. அப்போது விமல் ராஜ் கலந்துகொண்டு போட்டியில் ரைடு சென்றுள்ளார். இந்த சூழலில் எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கபடி விளையாட்டு வீரர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் விமல்ராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து முத்தாண்டிக்குப்பம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும், அன்றைய தினத்தில் நடைப்பெற்ற போட்டியில் விமல்ராஜ் அணி வெற்றி பெற்ற நிலையில் அவர் உடலுடன் சேர்த்து வெற்றிகோப்பையை புதைத்த காட்சி காண்போரை கலங்கவைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…