கோயில் வழிபாட்டால் வெடித்த மோதல்… கட்டை, இரும்பு கம்பியுடன் தாக்கிக்கொண்ட இரு பிரிவினர்!

இராஜபாளையம் அருகே கோயிலில் வழிபாடு செய்வது தொடர்பாக ஒரே பிரிவை சேர்ந்த இரண்டு தரப்பினர் இடையே ஏற்பட்ட முதலில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இராஜபாளையம் அருகே சோலைசேரி கிராமத்தில் ஒரே பிரிவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் கிருஷ்ணன் கோயில் தெருவில் உள்ள வத்தலகுண்டு மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்வது தொடர்பாக ஒரே பிரிவை சேர்ந்த இரண்டு தரப்பினருடைய கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பிரச்சனை இருந்து வருகிறது.

இந்த நிலையில் சமரசம் ஏற்படும் முன்பாக தனிப்பட்ட முறையில் கோயிலில் திருவிழா நடத்தக்கூடாது என காவல்துறையினர் கட்டுப்பாடு விதித்திருந்தனர். இந்த நிலையில் வரும் ஆடி அமாவாசை தினத்திற்கு திருவிழா கொண்டாட ஒரு பிரிவினர் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.இந்த திருவிழாவில் அனைவரும் கலந்து கொள்ள மற்றொரு தரப்பினர் முயன்ற போது திருவிழா ஏற்பாடு செய்தவர்கள் மறுத்ததாக தெரிகிறது.

இதனை அடுத்து ஒரு பிரிவை சேர்ந்த பெண்கள் சேத்தூர் ஊரக காவல் துறையினரிடம் மனு அளித்துள்ளனர் இந்த நிலையில் திருவிழா ஏற்பாடு செய்த சிலர் மற்றொரு தரப்பைச் சேர்ந்த இளைஞர்கள் அருன் கணகராஜ் கண்ணன். இசக்கி ராஜ் ஆதி ராமச்சந்திரன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் இளைஞர்களை கட்டை மற்றும் இரும்பு ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

இதனால் படுகாயம் அடைந்த இளைஞர்கள்ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

காவல்துறையினர் ஒரு தரப்பிற்கு ஆதரவாக செயல்படுவதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் புகார் தெரிவித்துள்ளனர் இது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு இளைஞர்களை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.