உச்சம் தொட்ட தங்கம் விலை: எவ்வளவு தெரியுமா?

கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக பெட்ரோல், டீசல் விலையினை தொடர்ந்து தங்கத்தின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய தினத்தில் தங்கம் விலை அதிகரித்துள்ளது.

இதனிடையே இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4, 696 ரூபாய்க்கு நேற்று விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கிராமுக்கு 24 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,720 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ. 37, 760-க்கு விற்பனையாகிறது.

அதே போல் தூயத்தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்துள்ளது. நேற்று மாலை இதன் விலை ரூ. 5,123- ஆக இருந்தது. தற்போது கிராமுக்கு 26 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 5, 149-ஆகவும் பவுனுக்கு ரூ. 41, 192 ஆக விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் வெள்ளியின் விலை மாற்றமின்றி காணப்படுகிறது. அந்த வகையில் இன்று ஒரு கிராம் 60.10 காசுகளாகவும் ஒரு கிலோ 60.100 ஆயிரமாக விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *