ஆசிரியர்கள் ஷாக்!! கல்வித்துறை அதிரடி உத்தரவு..

ஆசிரியர்கள்

தமிழகத்தில் வருகின்ற ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஆசிரியர்களின் வருகை பதிவு செயலி வாயிலாக மட்டுமே நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பள்ளி ஆசிரியர்கள் இதுவரையில் வருகை பதிவேட்டில் மூலம் குறித்து வருகின்றனர்.

இந்நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் கல்வித்துறை செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டுமென்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பிக்க திட்டமிட்டுள்ளது.

ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர்கள் முதன்மை கல்வி அலுவலகங்களில் இருக்கும் ஊழியர்கள் ஆகிய அனைவரும் “எமிஸ்” என்கிற பிரத்தியேக செயலியில் காலை 10 மணிக்குள் வருகையை பதிவு செய்யவில்லை என்றால், அன்றைய நாள் சம்பளம் கிடைக்காமல் போகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாத கடைசியில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த விவகாரம் தற்பொழுது ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.