சிறார்கள் பாலியல் வன்கொடுமை: உயர்நீதிமன்றம் உத்தரவு!!

சிறார் பாலியல் வன்கொடுமை வழக்கில் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து, வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த வேண்டுமென சென்னை டிஜிபிக்கு இந்த உத்தரவிட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தந்தை ஒருவர் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இதுகுறித்து காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கின் அமர்வு இன்று வந்தது. அப்போது பேசிய நீதிபதி சிறார்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் போது உடனடியாக போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

அதே சமயத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி அல்லது சிறுவர் யாராக இருந்தாலும் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பவேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இந்த உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என காவல்துறை டிஜிபிக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை முடித்து வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published.