குரூப் 4 தேர்வு எழுத சென்றவர்களுக்கு அனுமதி மறுப்பு: சென்னையில் திடீர் பரபரப்பு!!!

சென்னை புதுக்கல்லூரியில் சூப்பர் தேர்விற்கு கால தாமதமாக வந்ததால் தேர்வு அறைக்குள் அனுமதிக்கவில்லை என கூறி தேர்வர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் 7000 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு நாளை நடைப்பெறவுள்ளது. அதேசமயம் இந்த தேர்வுகளுக்கு சுமார் இருபத்தி இரண்டு லட்சம் பேர் எழுதுவதாக கூறப்படுக்கிறது.

இந்நிலையில் 7500 மையங்களில் குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது. அந்த வகையில் சென்னையில் மட்டும் 500க்கும் மேற்பட்ட மையங்களில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் தேர்வு எழுத இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தேர்வுக்கான அனைத்து நெறிமுறைகளும் முழுவீச்சில் தயார் செய்யப்பட்டு தேர்வு அறைகளில் பதிவு எண்கள் எடுக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தேர்வர்கள் கடைபிடிக்கவேண்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டு இருந்தது. அதன் படி, தேர்வு எழுதும் தேர்வர்கள் 8.30 மணிக்கு தேர்வு அறைக்கு செல்ல வேண்டும் கூறப்பட்ட நிலையில் புதுக்கல்லூரியில் சூப்பர் தேர்விற்கு கால தாமதமாக வந்ததால் தேர்வு அறைக்குள் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் தேர்வர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published.