நாளை தமிழகத்தில் மிதமான மழை பெய்யும்!!- வானிலை அப்டேட்..

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழைபெய்து வரும் நிலையில் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என வானிலை மையம் கூறியுள்ளது.

அதே போல் நாளை மறுநாள் வட தமிழக கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மாவட்டங்கள்‌, ராமநாதபுரம்‌, சிவகங்கை மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது.

வருகின்ற 27-ம் தேதி தென்‌ தமிழக மாவட்டங்கள்‌, நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, நாமக்கல்‌, திருச்சுராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்குற்கு வானம்‌ ஒரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌ என கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.