கள்ளக்குறிச்சி விவகாரம்: பள்ளிகளுக்கு பறந்த அதிரடி !!!

DPI

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தை தொடர்ந்து பள்ளியில் நடைபெறும் அனைத்து அசம்பாவிதங்களுக்கும் தலைமை ஆசிரியர் பங்கேற்று மாணவர்களை வழிநடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் பள்ளிகளில் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் முதலில் அவரவர் மாவட்ட கல்வி அலுவலரிடம் தகவல் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற்று ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.

இதனிடையே குடிநீர் பற்றாக்குறை, மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர் பற்றாக்குறை போன்றவற்றை பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்க கூடாது என கூறியுள்ளது. பள்ளிக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு மாவட்ட கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.

மரத்தடியில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்த கூடாது என்றும் பள்ளிகளில் தரமான சத்துணவு உள்ளதா என்பதை ஆராய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பேருந்து மேற்கூரையின் மீது மாணவர்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களை சொந்த வேலைக்காக பயன்படுத்தக்கூடாது என்றும் வகுப்பறையில் ஆசிரியர்கள் செல்போன் பேசக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *