அடுத்தடுத்த 4 வீடுகளில் 200 சவரன் நகை கொள்ளை: போலீசார் வலைவீசு!!!

புதுக்கோட்டை மாவட்டம் இழுப்பூர் பகுதிகளில் அடுத்தடுத்து 4 வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம் இழுப்பூர் பகுதியில் மருத்துவராக பணியாற்றி அருபவர் ஆதீத் அசந். இவர் உறவினருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வெளியூர் சென்ற நிலையில் இன்று காலை அக்கம்பக்கத்தினர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கொடுத்தனர்.

பின்னர் தகவலறிந்து வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததாக கூறினார். இதே போல் அடுத்தடுத்த வீடுகளில் இரண்டு சக்கர வாகனங்கள் திருடு போனதாக கூறப்படுகிறது. அதே போல் மற்றொரு வீட்டில் 40 சவரன் நகை திருடுபோய் இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிகழ்விடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

Leave a Reply

Your email address will not be published.