இலங்கைக்கு 16600 டன் நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு!

Kanimozhi

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு 16 ஆயிரத்து 600 டன் நிவாரண பொருட்கள் கொண்டு செல்லும் கப்பலை கனிமொழி கருணாநிதி எம்பி மற்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் தமிழகத்தில் இருந்து அனுப்பப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் கடந்த மே மாதம் 18-ந்தேதி முதல் கட்டமாக 30 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக 2-ம் கட்டமாக கடந்த மாதம் 22 ந் தேதி தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் 67.70 கோடி ரூபாய் மதிப்பிலான 15 ஆயிரம் டன் எடையுள்ள பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டன.

இதனை தொடர்ந்து 3-வது கட்டமாக நிவாரண பொருட்கள் இன்று தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு
54 கோடி மதிப்பிலான 16,356 டன் அரிசி, 6 கோடி ரூபாய் மதிப்பிலான 201 டன் ஆவின் பால் பவுடர், 14 கோடி ரூபாய் மதிப்பிலான 39 டன் உயிர் காக்கும் மருந்துகள் என மொத்தம் 74 கோடி மதிப்பிலான 16,596 டன் எடையுள்ள பொருட்கள் கப்பல் மூலம் அனுப்பி வைக்கும் பணி இன்று நடைபெற்றது இந்த கப்பலை

பொருட்களை கப்பலில் ஏற்றும் பணிகளை தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கொடியை சேர்த்து துவங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.