நாளை 5 மாவட்டங்களுக்கு மழை பெய்யும்…. மக்களே உஷார்!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை பெய்து வரும் நிலையில் நாளைய தினத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஒரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது.

அதே போல் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என கூறியுள்ளது.

வருகின்ற 26,27 தேதிகளில் வட தமிழக கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌, ராமநாதபுரம்‌, சிவகங்கை மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…