எச்சரிக்கை: அடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டும்!!

கடந்த சில தமிழகத்தில் மழைபெய்து வருவதால் மீனவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன் படி, நாளை தென்கிழக்கு மற்றும்‌ அதனை ஓட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌ என கூறியுள்ளது.

நாளை மறுநாள் இலங்கையை ஓட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌ என தெரிவித்துள்ளது.

வருகின்ற 25 ஆம் தேதி குமரிக்கடல்‌ பகுதி, தென்‌ தமிழக கடலோரப்பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா, தென்‌ கிழக்கு மற்றும்‌ தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 இலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌ என கூறியுள்ளது.

மேலும், 26-ஆம் தேதி குமரிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌ என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ கடலுக்கு செல்லவேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…