பலகோடி ரூபாய் மதிப்புள்ள சிலை: புதுச்சேரியில் மீட்பு!!

Statue

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொன்மையாக இருக்கும் சிலைகளை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் ஜூலை 20-ஆம் தேதி கும்பகோணம் சுவாமிமலையில் உள்ள கடையில் தொன்மையான சிலைகள் ஆவணங்கள் மின்றி இருப்பதாகவும், அவைகள் வெளிநாட்டிற்கு கடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதில் 6 சிலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதோடு அங்கு சோதனை செய்த போது பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக பல்வேறு சிலைகள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டதாக பல்வேறு இடங்களின் ஆவணங்கள் அதில் அடங்கியிருந்தது.

இதனை அடிப்படையாகக் கொண்டு அடுத்த கட்ட விசாரணையை அதிகாரிகள் மேற்கொண்டனர். இதனிடையே புதுச்சேரியில் இரண்டு தொன்மையான சிலைகள் ஆவணங்கள் இன்றி இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து ஆவணங்களை சமர்ப்பிக்க அதிகாரிகள் கூறியபோது தற்போது இல்லை என்று ஒரு வாரத்திற்குள் சமர்பிப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும் ஒருவாரத்திற்குள் சிலை தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை அவர் கைது செய்யப்படுவார் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.