கள்ளக்குறிச்சி விவகாரம்: மாணவி உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம்!

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மர்மமான முறையில் கடந்த 13-ஆம் தேதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கடந்த ஞாயிற்று கிழமை வன்முறையாக வெடித்தது.

இந்த சூழலில் மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்த நிலையில் மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதனிடையே உச்ச நீதிமன்றத்தை அடுத்த அந்த மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து மாணவியின் சடலத்தை வாங்கிகொள்ள பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக கடந்த 9 நாட்களாக கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சடலம் வைக்கப்பட்ட நிலையில் பிற்பகல் 2 மணிக்கு மாணவியின் உடலை பெற்றுக்கொள்வதாக பெற்றோர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று மாலையில் மாணவியின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.