குறுக்கே வந்த நாயால் பயங்கரம்! – அரசு பேருந்து விபத்து…

அருப்புக்கோட்டை அருகே பால் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி பின்புறம் அரசு பேருந்து மோதிய விபத்தில் 20 பேர் காயம் அடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சாலை விபத்துக்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்த போதும் இன்னும் குறைந்தபாடில்லை.

அந்த வகையில் ஆண்டிப்பட்டி அருகே சாலையின் குறுக்கே நாய் குறுக்கிட்டதால் டேங்கர் லாரி ஓட்டுனர் திடிரென பிரேக் போட்டுள்ளார். இதனால் சிவகங்கையை நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரியின் மீது மோதியது.

இதில் பேருந்தில் பயணம் செய்த 20 பேர் காயமடைந்தனர். அவர்கள் அருப்புக்கோட்டை அருகே இருக்கும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.