கேரட் விலை கடும் சரிவு; அதிகமாக வாங்கும் இல்லத்தரசிகள்!

ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கேரட் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் இல்லத்தரசிகள் கொண்டாட்டத்தில் அதிகமாக வாங்கி செல்கின்றனர். ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மினி ஆட்டோ மூலம் கேரட், பீட்ரூட் உள்ளிட்டவற்றை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

ஆத்தூர் அருகே கருமந்துறை, வெள்ளி மலை, கொல்லிமலை உட்பட பல்வேறு மலை கிராமங்களில் இருந்து சாகுபடி செய்யப்படும் கேரட்டுகள் மட்டுமின்றி ஊட்டி மேட்டுப்பாளையம் போன்ற இடங்களிலும் கேரட்டுகள் கொள்முதல் செய்யப்படுகிறது.

இதனால் கடந்த வாரம் ஒரு கிலோ 70 ரூபாய் வரையில் விற்பனையான கேரட் தற்போது 20 ரூபாய் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், ஒரு கிலோ கேரட் ரூ.20 ரூபாய்க்கு விற்பனையாகுவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சில்லறை கடைகள், சிறிய சந்தை, மார்க்கெட் உட்பட அதிக இடங்களில் பொதுமக்கள் கேரட் மகிழ்வுடன் வாங்கி செல்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…