தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் தெரியுமா?

தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நாளை 20 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இதனிடையே நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, கரூர்‌, நாமக்கல்‌, சேலம்‌, தர்மபுரி, திருப்பத்தூர்‌, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, பெரம்பலூர்‌ மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது.

அதே போல் அரியலூர்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌,
கடலூர்‌, மயிலாடுதுறை மாவட்டங்கள்‌ மற்றும்‌ தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என கூறியுள்ளது.

நாளை மறுநாள் திருப்பத்தூர், வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்‌சி, விழுப்புரம்‌, கடலூர்‌, செங்கல்பட்டு மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌ என கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.