உயிரிழந்த மாணவியின் உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை : எஸ்.பி அதிரடி!!

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த பள்ளி மாணவியின் உடலை நல்லடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக பதவியேற்ற மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பகலவன் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தையடுத்து கடந்த 17-ஆம் தேதி வன்முறை வெடித்தது. இதில் 70-க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்தனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாற்றம் செய்யப்பட்டு புதிதாக பகலவன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் புதிய காவல்துறை கண்காணிப்பாளராக இருக்கும் பகலவன் மீண்டும் அமைதி மாவட்டமாக கள்ளக்குறிச்சி இருக்கும் என தெரிவித்தார்.

பன்னிரண்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும், அதோடு உயிரிழந்த பள்ளி மாணவியின் உடலை நல்லடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.