விலையும் இல்லை விளைச்சலும் இல்லை!! – விவசாயிகள் வேதனை..

திண்டுக்கல் மாவட்டத்தில் புவிசார் குறியீடு கிடைத்தும் பூண்டின் விலை சரிவை நோக்கி செல்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு கிடைத்து 2 ஆண்டுகள் ஆகியும், உரிய விலை கிடைக்கவில்லை என்று அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரம் ஹெக்டர் பயிரிடப்பட்ட மலைப்பூண்டு இந்த ஆண்டு 626 ஹெக்டர் பரப்பளவில் மட்டுமே சாகுபடி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

புவிசார் குறியீடு பெற்ற பிறகு இரண்டு முறை மட்டுமே 1 கிலோ மலைப்பூண்டு 600 ரூபாயை தொட்டதாக கூறியுள்ளனர். கொடைக்கானலில் முக்கிய அடையாளமாக இருக்கும் மலைப்பூண்டு விவசாயத்தை ஊக்குவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

மேலும், மலைப்பூண்டுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.