அந்த வீடியோவை பார்க்கவே இல்லை!! – கள்ளக்குறிச்சி எஸ்.பி பகீர் தகவல்..

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கடந்த 13-ஆம் தேதி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது.

இதனிடையே மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய பெற்றோர்கள் கோரிக்கை வைத்த நிலையில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. அதோடு பள்ளியின் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் சூறையாடப்பட்டது.

இதனிடையே பள்ளி நிர்வாகம் சார்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு நீதிமன்றம் 15 நாள் காவல் விசாரணை தொடங்கியுள்ளது.

இந்த சூழலில் கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பதற்கு முன்பு சோர்வாக நடந்து வரும் வீடியோவை பார்க்கவில்லை என கள்ளக்குறிச்சி எஸ்.பி பகலவன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் ஒவ்வொரு ஆதாரங்களையும் ஆய்வு செய்து வருவதாக அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.