விழுப்புரம்: கல்லூரி மாணவனை கொன்று கிணற்றில் வீசிய கும்பல்!!

விழுப்புரம் அருகே கல்லூரி மாணவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் டி. எடையார் பகுதியை சேர்ந்த முனுசாமி என்பவரின் 21-வயதான மகன் அருண் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அருணை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக 17 வயது சிறுவன் போதையில் உளறிய தாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சிறுவர் மற்றும் மற்ற இரண்டு நபர்களையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் இறந்த மாணவனின் உடலை அப்பகுதியில் இருக்கும் ஏரியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.

பின்னர் நடத்திய விசாரணையில் அருணின் இருசக்கர வாகனத்தை சிறுவன், கீர்த்தி மற்றும் அவருடைய நண்பர்கள் திருடியதாக கூறப்படுகிறது. இவர்களின் வாக்குமூலத்தை செல்போனில் பதிவு செய்த அருண் திருடிய இருசக்கர வாகனத்தை திருப்பி தராவிட்டால் இந்த வீடியோவை போலீசாரிடம் ஒப்படைத்த கூறியுள்ளார்.

இதனையடுத்து வாகனத்தை திருப்பி தருவதாக அவரை வரவழைத்து மூன்று பேரும் அவரை கொன்று ஏரியில் வீசியதாக கூறப்படுகிறது. மாணவனின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிடிபட்ட 3 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்ததை அடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

75 வது சுதந்திர தினம்: இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் – திரௌபதி முர்மு

இந்திய நாட்டின் பாதுகாப்பு, பராமரிப்பு, முன்னேற்றம், நல்வளம் காக்க அனைவரும் முன்வர வேண்டும்…